மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஞானோதயம் பிறக்கக்கூடிய நன்மை தரக்கூடிய நல்ல நாளாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த சிக்கல்கள் தீரும். சுய தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை சாதிக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த பிரிவு மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம் கவனம் வேண்டும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கனவுகள் நிறைவேற வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுபகாரிய முயற்சிகளில் இருந்து மந்த நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் சாதக பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனப்போராட்டம் நீங்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பிரச்சனைகளை பெரிதாக்காமல் ஆறப் போடுவது நல்லது. சுப காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் வரலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முன்னேறக் கூடிய வாய்ப்புகள் நெருங்கி வரும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலட்சியம் வேண்டாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமயோஜத புத்தியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு சண்டை சச்சரவுகள் மெல்ல மறைய துவங்கும். சுயதொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் லாபம் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுய சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எடுக்கக்கூடிய முடிவுகளில் தீர்க்கமாக இருப்பது நல்லது. குடும்ப உறவுகள் பக்க பலமாக இருக்க செய்வார்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணி புரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கான பலனை அனுபவிக்க வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். சுய தொழிலில் எடுக்கக்கூடிய பண ரீதியான முடிவுகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய எண்ணங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமைகளை மேலும் மெருகேற்றிக் கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் சுய லாபம் காண வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் பேசும் பேச்சில் இனிமையை வளர்த்துக் கொள்வது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொழுது இனிய பொழுதாக அமையப் போகிறது. தொலைதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளை கேட்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் சிறு சிறு விஷயங்களில் முன்கோபம் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முயற்சி பலிதம் ஆகும். இதுவரை நீங்கள் சந்திக்க நினைத்த நபர் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள். குடும்பத்தில் நன்மைகள் பெருகும். உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.