10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த விலைத் திருத்தம் இன்று (8) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகஇ வணிகஇ உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த விலைக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
உணவுப் பொருட்களின் விலை
இதன்படி, பூண்டு கிலோ ஒன்றின் விலை ரூ.699 இலிருந்து ரூ.649 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.259 இலிருந்து ரூ.224 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.259 இலிருந்து ரூ.239 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி, பாசிப்பயறு, சிவப்பு பச்சை அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, கடலை மற்றும் உளுந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது
பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude Oil) விலை ஒரு பேரல் 80 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

