கொரோனா நோய் தொற்று தொடங்கி தற்போது வரை கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் தீபால் பெரேரா கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தெரிவித்த கருத்து
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.
உயரத்திற்கு எடை இல்லை. மருத்துவமனையில் சேர்க்கப்படும் இந்த குழந்தைகளுக்கு பொருளாதார நிலையோடு சரியான ஊட்டச்சத்து கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கொரோனா நிலைமை குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் பாதித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.