முத்துவுடைய போனை ரோகிணி திருடியதால் முத்து பதறிப்போய் நிற்கிறார்கள்.
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா – கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், முத்துவின் போனை எப்படியாவது திருட வேண்டும் என ரோகிணி முயற்சி செய்து வந்தார். மீனாவின் தம்பி சத்யா குறித்து முத்துவின் போனில் இருக்கும் விஷயத்தை ரோகிணி தெரிந்து கொண்ட பின்னரே இந்த வேலையை செய்திருக்கிறார்.
போனை தேட சொல்லி மீனாவிடமும் சொல்கிறார் முத்து. இவை அனைத்தையும் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டே ரசிக்கிறார் ரோகிணி.
இதன்பின்னர் சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.