இலங்கையில் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை (14) நடைபெற்றுவருகின்றது.
இந்த நிலையில் வவுனியா நகரப்பகுதிகளில் வேட்பாளரின் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக நகரத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களிலிற்கு அருகில் வேட்பாளர்களின் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட அட்டைகள்,துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவற்றை அகற்றி எரிக்கும் செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.