உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகளாக பிரதிநிதித்துவப்படுத்தாகத் தெரிவித்து பல்வேறு பிரதேசங்களிலும் சுற்றித்திரிந்து பணம் சேகரித்த சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி நபர்களுக்கு பணம் செலுத்திய அல்லது அவர்களால் தங்களின் இருப்பிடம் பரிசோதனை செய்யப்பட்ட வரி செலுத்துபவர்களின் தகவல்கள் சட்ட நடவடிக்கைகளுக்காகத் தேவைப்படுவதாகவும்,
அது தொடர்பாக உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் கையெழுத்து இடப்பட்ட அறிவித்தலில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.