வட இந்தியாவில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் 2,000 இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இமயமலையில் உள்ள நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்ததில், வட இந்திய மாநிலமான உத்தர்காந்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த அணைகள் உடைந்து.
இந்த திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இதுவரை குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாகவும், 170-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட இராணுவ, துணை ராணுவ குழுக்கள் மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போன அனைவரும் Alaknanda மற்றும் Dhauligangaவில் உள்ள நீர்மின் நிலைய பணியாளர்கள் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஒரு சுரங்கத்தில் 37 நீர்மின் நிலைய தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். வெள்ளத்தால் அந்த சுரங்கப் பாதை குப்பைகளாலும் பாறைகளாகும் மூடியுள்ளது.
அவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருவதாக துணை ராணுவ இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் கூறியுள்ளனர்.