வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின் ஓயா தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (18) பிற்பகல் தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து வந்து தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது.
இதில் காயமடைந்த தொழிலாளர்களே உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

