மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிரச்சனைகளை சுலபமாக எதிர்கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பரிசுகள் காத்திருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகத்தில் புது பொலிவு தென்படும் நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே தேவையில்லாத ரகசியங்கள் வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அனுபவசாலிகள் சொல்வதை கேட்டு முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அகத்தின் அழகு முகத்தில் தெரியவரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தவாரே லாபம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு துணிவு இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். வெளியிடங்களில் வாக்குவாதங்கள் வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுய சிந்தனை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வேலை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கொள்கையிலிருந்து மாறாமல் இருப்பது நல்லது. சுற்றி இருப்பவர்கள் பிரைன் வாஷ் செய்ய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய வேலைகள் தவறவிட கூடும் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. உடல் சார்ந்த பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் வேண்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில மாற்றங்களை காணக்கூடிய வாய்ப்பு உண்டு. பல தரப்பட்ட மனிதர்களை சந்திப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிகம் பணப்புழக்கம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர விரயம் ஆகக்கூடிய அமைப்பாக இருக்கிறது எனவே தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்யாமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் இனிமையான நண்பர்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் செல்லும் இடங்களில் உங்கள் நகைச்சுவையால் அனைவரையும் கவருவீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. உங்கள் அன்புக்குரியவர்களிடம் முன் கோபத்தை காண்பிக்க வேண்டாம். தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களால் ஆபத்து வர வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணம் ஈடேறும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் தள்ளி போட வேண்டாம் அந்தந்த வேலைகளை உடனுக்குடன் முடிப்பது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அயராத உழைப்பு முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பணியில் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையில்லாமல் வாக்குறுதிகளை எவருக்கும் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். சுயதொழில் செய்பவர்களுக்கு பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதி நிலை நெருக்கடி மாறக்கூடிய இனிமையான அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கப் போகிறது. எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பகைமை ஒழியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ ரீதியான பிரச்சினை வரலாம் கவனம் வேண்டும்.