யாழ்ப்பாண பகுதியில் பெண்ணொருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை (28-07-2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் யாழ்.சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணே கைதாகியுள்ளார்.
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன் குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.