யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் கடந்த சில நாட்களாக பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
பல தொன் எடையிலான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வழியாக பயணிக்கும் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

