யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் பெரிய நாகப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் பீதியடைத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து அவரச அவசரமாக இறங்கியுள்ளனர்.
யாழில் இருந்து பேருந்து புறப்பட்டு சுமார் ஒன்றரை மணித்தியாலம் ஆகியும் பயணிகள் யாரும் நாகப்பாம்பு இருப்பதை கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி நகரில் பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் வாகனத்தின் எல்லைக்குள் நாகப்பாம்பைக் கண்டுள்ளார்.
நாகப்பாம்புடன் பேருந்தை தொடர்ந்து இயக்கிய சாரதி, இப்போது ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

