தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களினியாக இருந்து, அதன்பின் சின்னத்திரை நடிகையாக தனது திரையுலக பயணத்தை துவங்கியவர் வி.ஜெ. சித்ரா.
இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் அவருக்கு சமீபத்தில் நடந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
சித்ரா என்றாலே நாம் அனைவருக்கும் விஜய் டிவி மற்றும் மக்கள் டிவி தான் ஞாபகத்துக்கு வரும்.ஆனால் சித்ரா சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரில் நடித்திருக்கிறார்.அங்கிருந்து திரைப்பயணத்தை தொடங்கிய அவருக்கு இப்படி ஒரு முடிவு அமைந்துவிட்டது.
இந்தநிலையில் நடிகை சித்ரா மறைந்ததில் இருந்து அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் என நிறைய வெளியாகிக் கொண்டிருக்கிறது. சித்ராவிற்கு அவரது வீட்டில் பெரிய புகைப்படம் வைத்து சாமி கும்பிட்டுள்ளனர்.
அப்புகைப்படம் வெளியாக ரசிகர்கள் உங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பதை பார்க்க முடியவில்லை என கண்ணீருடன் பதிவு செய்கின்றனர்.