தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு 45 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மைனர் பெண்ணை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டிபென்டிகே 15 வருட சிறைத்தண்டனைக்கு உத்தரவிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் கூட்டில் அழுது புலம்பியவாறு , இடைநிறுத்தப்பட்ட தண்டனையை கோரினார்.
எனினும் உயர் நீதிமன்ற நீதிபதி கோரிக்கையை நிராகரித்தார், மேலும் இந்த அதிகாரி தனது சேவையைப் பெற வந்த ஒருவருக்கு எதிராக கடுமையான குற்றத்தைச் செய்துள்ளார் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.