முட்டையை சாப்பிட ஆசைப்பட்டு பைப்பின் உள்ளெ இருந்த முட்டையுடன் பைப்பை விழங்கிய பாம்பின் வீடியோ தற்போத இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய உலகில் தொழிநுட்பத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. இதை மனிதர்களாகிய நாம் அதிகளவில் பாவனை செய்த வருகிறோம். இணையம் நினைத்தால் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்லாம்.
என்ற அளவிற்கு இது நம்முள் பின்னி பிணைந்துள்ளது. பொதுவாக பொழுது போக்கிற்காக சமூக வலைத்தள பக்கத்தில் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். இந்த வீடியோக்கள் கூடுதலாக மிருகங்களை வைத்து அதிகமாக வெளியிடப்படுகின்றது.
அதிலும் பாம்பு பற்றிய விடியோக்கள் அதிகம் காணப்படகின்றது. அப்படி தான் இன்றும் ஒரு விடியோ வைரலாகி வருகின்றது. விலங்குகளாக இருந்தாலும் மனிதர்களாக இருந்தாலும் பசி என்பது ஒன்று தான்.
இதை இந்த வீடியோ மூலம் புரிந்து கொள்ளலாம்.ஒரு பாம்பு ஒரு பைப்பில் இருக்கும் முட்டையை சாப்பிட எண்ணி, தெரியாமல் முழு பைப்பையும் விழுங்கி விடுகிறது. அதன் பின்னர் அது அதை வெளியே எடுக்க முடியாமல் மிக சிரமப்படுகின்றது.
பரிதாபமான நிலையில் இருக்கும் அந்த பாம்பை ஒரு இளைஞர் காப்பாற்றுகிறார். அந்த பாம்பு படும் அவஸ்தையை பார்த்து அதை எப்படியாவது இந்த வேதனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என பெரும் முயற்சி எடுக்கிறார்.
வயிற்றில் பெரிய பைப் இருக்கவே, பாம்பின் வயிறு வீங்கி காணப்படுகின்றது. இளைஞர் ஒரு கம்பி கொண்டு பாம்பின் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுத்து அந்த பைப்பை வாய் பக்கம் மெதுவாக தள்ளுகிறார்.
இறுதியாக பாம்பு மற்றும் இளைஞனின் முயற்சி பலன் அளிக்கின்றது. பைப் பாம்பின் வாய் வழியாக வெளிவருகிறது. பைப்பில் பாம்பு ஆசைப்பட்ட முட்டையும் காணப்படுகின்றது.