ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
குறித்த அறிவிப்பை அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்டுள்ளது.
“வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதற்காகப் பெரிய அளவிலான விலையைக் கொடுக்க வைக்கும் வகையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவுப் படைகள் ஈரானுக்கு எதிராகத் தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன” என்று அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதல்
மேலும், ஈரானின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவையற்றது, ஆபத்தானது மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மிகத் தெளிவாக மீறும் செயலாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா குறிப்பாக எந்தெந்த இடங்களைக் குறிவைத்தது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை
எனினும், தெற்கு ஈரானில் உள்ள சிரிக் நகரின் தஹேரூய் கப்பல்துறைபகுதியில் ஆறு ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

