இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் தம்பதியருக்கு இடையே விசித்த்ரமான விவகாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியருக்கு இடையே விசித்திரமான ஒரு விவகாரம் நடந்திருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் இனியும் தன் மனைவியுடன் தன்னால் வாழ முடியாது என்று விவகாரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார் கணவன்.
அந்த இளைஞரின் விவகாரத்திற்கான காரணத்தைக் கேட்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
எதற்காக தன்னால் மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது எதற்காக மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார் என்று பார்த்தால், தன் மனைவி தினமும் குளிக்காமல் இருக்கிறார்.
அதனால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று விவகாரத்திற்கான காரணத்தினை மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார் அந்த கணவன். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, கணவருக்கு கவுன்சிலிங் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.