பொதுவாக சிலருக்கு காலையில் எழுந்து குளிப்பது என்பது பெறும் சவாலாக இருக்கும்.
அப்படியானவர்களுக்கு என தனியாக ஒரு வாஷிங் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பிரபல ஜப்பான் நிறுவனமான சயின்ஸ் கோ. லிமிடெட் என்ற நிறுவனம், மனிதர்களுக்கான சலவை இயந்திரத்தைத் தயாரிக்கும் திட்டம் தொடர்பான செய்திகளை வெளியிட்டது.
இதற்காக 50 ஆண்டுகளுக்கு முன்னரே அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. கடந்த 1970 இல் ஜப்பான் உலக கண்காட்சியில் ‘மனித சலவை இயந்திரம்’ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ”அல்ட்ராசோனிக் பாத்” என அழைக்கப்படும் இந்த இயந்திரம் சன்யோ எலெக்ட்ரிக் கோ என்ற (Sanyo Electric Co.) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்த இயந்திரம் உலக நாடுகளின் மத்தியில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சலவை இயந்திரம் வெறும் 15 நிமிடங்களில், அதற்குள் இருக்கும் மனிதரை மஜாஜ் செய்து, சுத்தப்படுத்தி, உலர்த்தவும் செய்கிறது.
இந்த இயந்திரம் கண்டுபிடித்த புதிதில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தற்போது உயர் தொழில்நுட்ப மேம்படுத்தலுடன் மீண்டு வருகிறது.
சயின்ஸ் கோ. லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான யசுவாகி அயோமா, அவருக்கு 10 வயதாக இருக்கும் போது, “அல்ட்ராசோனிக் பாத்” சலவை இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு, அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது இயந்திரம் மேம்படுத்த முடிவு செய்துள்ளார்.
இதன்படி, குளியல் மற்றும் சமையலறை கண்டுபிடிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற சயின்ஸ் கோ. லிமிடெட் நிறுவனம், மனித சலவை இயந்திரத்தை தன் சொந்த பதிப்பில் உருவாக்கும் திட்டம் செய்து, ‘உசோயாரோ’ என பெயர் சூட்டப்பட்டது.
இந்த இயந்திரம் நுண்குமிழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கும் என்றும், இதனுடன் பல்வேறு கண்காணிப்பு சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது என்றும் இந்நிறுவனம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மனிதரை சுத்தப்படுத்துவதோடு, அவரின் மனநிலை மேம்படுத்தி ஓய்வாகவும் வைத்திக்கும். இதுவே இந்த இயந்திரத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகின்றது.