உருவாகியுள்ளது. இந்தச் சட்டத்தில் 10 மில்லியன் ரூபா அபராதம் மற்றும் 3 வருட சிறைத்தண்டனை உள்ள போதிலும், பெரிய அளவிலான முதலீட்டாளர்கள்/அபிவிருத்தியாளர்கள் இந்த மதிப்பீட்டு செயல்முறையைத் தவிர்த்துச் செல்ல இடமுண்டு என்பதால், இவ்வாறான ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
30 வருடங்களாகப் பதவி உயர்வு வழங்கப்படாத வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் பதவிகளை உடனடியாக நிரப்புங்கள். வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் பதவிகளுக்கான உள்ளக பதவி உயர்வுகளானது கடந்த 30 வருடங்களாக வழங்கப்படவில்லை. 13 களப் பிராந்தியங்களுக்கு வெறும் 6 உதவிப் பணிப்பாளர்களே உள்ளனர் என்பதால், உடனடியாக உதவிப் பணிப்பாளர் பதவி உயர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம். 3500 பன்முகப் பணி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5000 பேர் வனவிலங்குப் பாதுகாப்பை வலுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும், பல தசாப்தங்களாக வனவிலங்குத் துறையில் பணியாற்றிய 800-1200 உத்தியோகத்தர்கள் உள்ளதால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், வனவிலங்கு வெளிக்கள உத்தியோகத்தர்களின் சம்பளத் தளம் MN1 இலிருந்து PL2 ஆகக் குறைக்கப்பட்டமை மற்றும் 250 தன்னார்வ வழிகாட்டிகளை நிரந்தரமாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.
உயர்தர மாணவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவும், சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்கு 24 மாதங்கள் இருக்க வேண்டும். ஆனால், இம்முறை முதற்தடவையாகப் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்களுக்கு 21 மாதங்களே கிடைத்துள்ளன. அதேபோல், இரண்டாம் தடவை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 2024 இல் 198 நாட்களும், 2025 இல் 178 நாட்களும் கிடைத்திருந்த போதிலும், தற்போது வெறும் 131 நாட்களே கிடைத்துள்ளன. இவற்றைக் கருத்திற்கொண்டு அம்மாணவர்களுக்கு ஏதேனும் நியாயமான கால அவகாசத்தை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

