பாரிஸ் 2024ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் (F64) போட்டியில் இலங்கையின் சமித துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
67.03 மீற்றர் தூரம் வரை தனது ஈட்டியை எறிந்து, தனது தனிப்பட்ட சிறந்த தூரத்துடன், துலான் F44 பிரிவில் தனது முந்தைய உலக சாதனையை (66.49 m ) முறியடித்தார்.
தனது 5 முயற்சியிலேயே சமித்த துலான் கொடிதுவக்கு இந்த உலக சாதனையை நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது.