இந்தியாவில் இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்டு, பல பெண்களிடம் பழகி அதன் பின் அவர்களை மிரட்டி வந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
விஜயவாடாவை சேர்ந்தவர் சுமன். இவர் ஹைதராபாத்தில் தங்கி அமேசான் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
பகல் முழுவதும் கம்பெனியில் வேலை பார்த்து வரும் சுமன், இரவு நேரம் ஆகிவிட்டால், பெண்ணாக தன்னை மாற்றி கொள்வாராம்.
இதனால் இந்த 2 வருடத்தில் மட்டும் சுமனிடம் 70 பெண்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். பெண் பெயரில் பேர் உள்ளதாலும், பெண் போட்டோவை வைத்திருந்ததாலும், இளம் பெண்கள் சிலர் தானாகவே இவரிடம் நட்பு கொள்ள வந்துள்ளனர்.
அப்படி கிடைத்த இந்த 70 பெண்களிடமும் ஆரம்பத்தில் சகஜமாகவே பேசி வந்தார். அவர்களிடம் தனிப்பட்ட முறையிலும் பேச்சை தொடங்கி உள்ளார்.
அதன் பின் அவர்களின் புகைப்படங்களை தனக்கு அனுப்பும் படி உரிமையுடன் கேட்க துவங்கியுள்ளார். இதனால் இவர் ஆண் என்பதை அறியாமல் அந்த பெண்களும் சகஜமாக பேசி வந்ததால், நாட்கள் ஆக, ஆக, இவர் தன்னுடைய அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை அந்த பெண்களுக்கு அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளா
அதுமட்டுமின்றி, தான் சொல்வது போல கேட்கவில்லையென்றால், உங்களின் புகைப்படங்களை எல்லாம் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டு விடுவேன் என்றும் அந்த பெண்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.
இதில் ஒரு பெண் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டு விட்டார். ஒருகட்டத்தில் சுமனின் தொல்லை பொறுக்க முடியாமல், ஹைதராபாத் சைபர் கிரைம் பொலிசார் கொடுக்க, பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, இவரால் 70 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சுமனை கைது செய்த பொலிசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.