நாட்டின் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி அபாய வலயங்களை மையப்படுத்தி, “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துடன் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு அதி அபாய வலயங்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 67,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரையில் 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 21,538 நோயாளர்கள் பதிவாகிய நிலையில், ஜூலை மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 11,764 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு நாட்டில் அதிகப்படியான டெங்கு நோயாளர்கள் (186,101) பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய நிலைமை அந்த ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்வதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

