தென்னிலங்கையில் மற்றுமொரு பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்ததாக பொலிஸார்கூறியுள்ளனர். இந்த விபத்து நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் மடுல்கல ஊடாக பன்வில நோக்கிச் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பஸ்ஸில் 28 பேர் பயணித்த நிலையில், அவர்களில் 16 பெண்களும் நான்கு ஆண்களும் காயமடைந்து மடுகல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.