திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணாமல் போன சிறுவனை ஒரு நபர் கூட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடந்த 27 ஆம் தேதி அலிபிரி பேருந்து நிலையம் அருகே இலவச தரிசன டிக்கெட் பெறக் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் 6 வயது சிறுவன் சிவம்குமார் சாகு காணாமல் போனார்.
அச்சிறுவனை 50 வயது மத்திக்கத்தக்க ஒருவர் கூட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கண்டறிந்தனர். இதனடிப்படையில் 4 தனிப்படை போலீசார் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சிறுவனைத் தேடி வருகின்றனர்.