பதுளை மாவட்டத்தில் எவ்வித மழைப்பொழிவும் இல்லாத நிலையில், ராவண எல்ல நீர்வீழ்ச்சியின் நீரோட்டம் திடீரென மண் கலந்த நிறத்தில் (பழுப்பு நிறத்தில்) மாறியுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பிரதேச செயலாளர்களுக்கும், கிரிந்தி ஓயாவைப் (Kirindi Oya) பயன்படுத்தும் மக்களுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை பண்டாரவளை, அம்பதந்தேகம மற்றும் பூனாகல ஆகிய பகுதிகளில் பெய்த மழையினாலேயே இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்

