பெங்களூருவில் இருந்து ஜெயலலிதாவின் காரில் வந்து கொண்டிருந்த சசிகலா தமிழக எல்லையில் வேறு காருக்கு மாறினார்.
சசிகலா வருகையால் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. கொரோனா சிகிச்சை முடிந்து பெங்களூரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் தற்போது தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
இதனிடையே சசிகலா தனது காரில் அதிமுக கொடி பயன்படுத்தியது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.
சசிகலா தமிழகம் வரும் போது அவர் தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக – கர்நாடக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி பகுதிக்கு வந்த சசிகலா கார் மாறினார். ஜெயலலிதாவின் காரை அவர் பயன்படுத்தி வந்த நிலையில் அதிலிருந்து வேறு காருக்கு மாறி அவர் பயணிக்க தொடங்கினார்.
அதிமுக கொடியை பிடிக்க கூடாது, அமமுக கொடியை பிடிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக கொடிகளை போலீஸார் கீழே இறக்கினர்.
முதல் இணைப்பு- அதிமுக கொடியுடன் சசிகலா புறப்பட்டார்
அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளார் சசிகலா.
பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் சசிகலா குணமான நிலையில், மருத்துவர்கள் அறிவுரையின் படி பெங்களூருவில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் இன்று சென்னைக்கு வரவிருக்கிறார், மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகும்போது சசிகலாவின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது.
இதுகுறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், சி. வி. சண்முகம் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, சசிகலா காரில் அதிமுக கொடியை பொருத்த காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டுள்ளார்.
போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி மீண்டும் பொருத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.