இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நேற்று (14) வரையான தரவுகளின்படி நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 71,235 ஆக பதிவாகியுள்ளதுடன், 49 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

