நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் நடிகையிடம் அத்துமீறி கேள்வி கேட்கும் ரசிகர்களின் அட்டகாசங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதற்கு பல நடிகைகள் பதிலடி கொடுத்தாலும் ஏதாவது ஒரு வகையில் வம்பிழுத்து வருகின்றனர்.
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா வாரியர். ஹிந்தியிலும் இவருக்கு கணிசமான படவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் பிரியாவாரியர் நடிப்பில் தெலுங்கில் செக் என்ற படம் வெளியானது. முதலுக்கு மோசம் இல்லை என்ற அளவுக்கு ஓரளவு வரவேற்பைப் பெற்ற இந்த படத்தின் மூலம் மேலும் சில தெலுங்கு பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாம்.
அதற்கு காரணம் கிளாமருக்கு எந்த குறையும் வைக்காமல் பிரியா வாரியர் தாராளம் காட்டி வருவது தான் என்கிறார்கள். இது ஒருபுறமிருக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா வாரியரிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி கேடு கெட்ட வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இதனைப் பொறுக்க முடியாத பிரியா வாரியர் உடனடியாக அந்த கேள்விகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக வெளியிட்டார். மேலும் பேக் ஐடி வைத்து சுற்றும் உனக்கு இதெல்லாம் தேவையா? எனும் அளவுக்கு கேட்டுள்ளார்.