தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.
ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கர்ணன்’ என்ற படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கதிரை வைத்து ‘பரியேறும் பெருமாள்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கர்ணன்’ படத்தில் கதையின் நாயகியாக ரஜிஷா விஜயன் வலம் வருவாராம். மேலும், கௌரி கிஷன், யோகி பாபு, லால், அழகம் பெருமாள் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் முடிந்தது. தற்போது, இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். கையில் விலங்குடன் தனுஷ் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.