தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக இது வருகிறது.
விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு என்று எந்த ஊடகமும் இதுவரை இல்லை. ஆனால் அதிமுக, திமுக, மதிமுக, விசிக, பாமக, அமமுக என எல்லா அரசியல் கட்சிகளுக்குமே தொலைக்காட்சி உள்ளது.
தவெக அரசின் புதிய திட்டங்கள், முதலமைச்சர் விஜய்யின் மக்கள் நலப் பணிகளைத் தொய்வின்றி மக்களிடம் சேர்க்க ஒரு அதிகாரப்பூர்வ ஊடகம் அவசியம் என்பதால் ‘வெற்றி தொலைக்காட்சி’ (Vetri TV)யை தொண்டர்களின் விருப்பப்படி தவெகவின் சேனலாக முதல்வர் விஜய் ஆரம்பித்துள்ளார்.
தவெக சார்பில் புதிய சேனல் தொடங்கும் ஆரம்பகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தொழில்நுட்ப நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சப் எடிட்டர்கள், நியூஸ் புரொடிசர்கள் மற்றும் ஆங்கர்களை தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவ்ல்காள் மேலும் தெரிவிக்கின்றன.

