நம் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்கள், பயங்களின் வெளிப்பாடு தான் கனவு.
ஆழமான தூக்கத்தின்போது வரும் கனவுகளுக்கு நிச்சயமாக பலன் உண்டு என்று கூறுவார்கள்.
சரி இனி எந்தெந்த பூச்சிகள் கனவில் வந்தால், என்னென்ன மாதிரியான பலன்கள் உண்டென்று பார்ப்போம்.
- அட்டைப்பூச்சி – எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படுமாம்.
- பட்டாம் பூச்சி – குடும்ப ஒற்றுமை மேலோங்குமாம்.
- பூரான் – எதிர்பாராத பொருள் வரவு ஏற்படுமாம்.
- எட்டுக்கால் பூச்சி – உடல் ஆரோக்கியம் மேம்படுமாம்.
- கரப்பான் பூச்சி – குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படுமாம்.
- சிலந்தி – பொருள் வரவு அதிகரிக்குமாம்.
- வண்டுகள் – நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் என்று அர்த்தமாம்.
- ஈக்கள் – வியாதிகள் வர வாய்ப்புண்டாம்.
- தேனீக்கள் – பிரயாணங்களின்போது கவனமாக இருக்க வேண்டுமாம்.
- வெட்டுக்கிளி – பார்க்கும் தொழிலில் பாதிப்பு ஏற்படுமாம்.