பொத்துவில் உகந்த முருகன் ஆலையத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாதை யாத்திரை சென்ற குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
குமுக்கன் வனப்பூங்கா இந்துகோவில் பகுதியில் வைத்து பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த குறித்த குடும்பஸ்தரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய லிங்கசாமி கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது நேத்திக்கடனை முடிப்பதற்காக உகந்த முருகன் ஆலையத்தில் இருந்து கதிர்காமத்திற்கான பாதை யாத்திரையை உயிரிழந்த நபர் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.