மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் அவசர காலங்களில் விமானங்களைத் தரையிறக்குவதற்காக மேலும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் பலத்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல மேற்படி தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
சிறப்புச் செயற்குழு
மேலும், வானிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலைமைக்கும் உடனடியாகப் பதிலளிக்கும் வகையில் சிறப்புச் செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்தத் திட்டமிடல் குழுவில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, இலங்கை விமானப்படை மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட பல முக்கிய தரப்பினர் உள்வாங்கப்பட்டு கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

