இலங்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ் வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளுக்கமைய 2023ல், முதல் 6 மாதங்களில் 47,732 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த நிலையில், 2024ல் முதல் 6 மாதங்களில் 27,755 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.