ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் உடல் பிடிப்பு சிகிச்சை நிபுணர் ஒருவர் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 4 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தங்காலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக தங்காலை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் உடல்பிடிப்பு வைத்தியராக கடமையாற்றி வரும் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தங்காலை ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, சூரியவெவ உள்ளிட்ட பிரதேசங்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகம் செய்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேக நபர் சில காலமாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.