அமைச்சுக்களுக்கான விடயதானங்களை ஒதுக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அமைச்சர் ஒருவருக்கு விசேடமாக ஒதுக்கப்படாத அனைத்து துறைகள், பணிகள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்கள் என்பன தொடர்ந்தும் ஜனாதிபதியின் கீழ் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.