நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் 7070 மெற்றிக் தொன் நெல் இருப்பு உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பு இருப்பதால் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தையில் அரிசியின் விலையினை கருத்தில் கொண்டு, அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பு அரிசியாக மாற்றப்படும் என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சந்தையில் அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும், அரிசி இறக்குமதி மற்றும் உதவியாக வேறு நாடுகளில் இருந்து அரிசி தொகை பெறப்பட்டமையினால் இது நிகழ்ந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.