ரயிலுடன் மோதுண்டு இரண்டு யானைகள் பலியாகியுள்ளன. குறித்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே யானைகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்த நிலையில் ரயில் சுமார் 1 மணி நேரத்தின் பின்னர் சேவைக்கு திரும்பியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசாரும், வனஜீவராசிகள் திணைக்களமும் தனித்தனியான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.