2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்க இலங்கை பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்களுக்கு ஜனவரி 18- 01-2022 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.