மது போதையில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக செயற்பட்ட பெண் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாகவுள்ள வீதியில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் விதமாக பெண் ஒருவர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார்.
இதன்போது வீதியால் சென்றவர்கள் அதனை அவதானித்த நிலையில் , அது குறித்து அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் வந்து குறித்த பெண்ணை வைத்தியசாலை கொண்டு செல்ல நோயாளர் காவு வண்டியில் ஏற்ற முற்பட்ட போது பெண் மது போதையில் விழுந்து கிடந்தமை தெரியவந்துள்ளது.
அப் பெண் வீதியில் நடமாடி பொது போக்குவரத்துகு இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் வீதியில் மோசமாக நடமாடித் திரிந்துள்ளார்.
இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போக்குவரத்து பொலிசார் பெணணை கைது செய்துள்ளனர்.