திருகோணமலை மாவட்டத்தின் சாம்பல்தீவு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு மனித நடவடிக்கைகளால் நாயாறு மற்றும் நந்திக்கடல் குளங்கள் மாசுபடுவதாகவும், ஏராளமான கழிவுகளால் குளங்கள் நிரப்பப்படுவதால் சதுப்புநிலங்கள் மற்றும் குளத்தை சார்ந்த உயிரினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த இரண்டு தடாகங்களையும் பாதுகாப்பதற்கான உண்மைகளை ஆய்வு செய்ய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சர் தீர்மானித்ததுடன் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.