தனது கணவரை பெண்ணொருவர் ஏலம் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் டிரேட் மீ என்ற இணையதளத்தில் அண்மையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, அயர்லாந்தை சேர்ந்த லிண்டா மலிஸ்டர் என்ற பெண், தனது கணவர் ஜான் மலிஸ்டர் என்பவரை ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தார்.
அந்த விளம்பரத்தில், ஜானுக்கு 37 வயது ஆகிறது. இவர் 6.1 அடி உயரம் கொண்டவர். இவர் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு.
அவருக்கு முறையாக இரை வைத்து, தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால், இன்னும் சில வீட்டு பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது.
ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது. இந்த விற்பனை இறுதியானது. ரிட்டன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளப்பட மாட்டாது, என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த விஷயம் தனது நண்பர்கள் மூலமாக ஜானுக்கு தெரியவந்தது.
ஆனால் இதையெல்லாம் கேட்டு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை என்றார் அவர். ஏனெனில் அவர் இதற்கும் மேல் நடக்கும் என எண்ணியிருந்தார். ஏல விளம்பரம் வெளியான ஒரு மணி நேரத்தில் 12 பேர் அதற்கு ஏலம் கேட்டிருந்தனர். ரூ.5 ஆயிரம் வரை விலை கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, டிரேட் மீ இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த விளபரத்தை பார்த்த பலரும் இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.