மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இலக்கை நோக்கி முன்னேறக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அனுகூல பலன் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் பலிதமாகும். முன்னெடுத்த திட்டங்கள் நிறைவேறும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் நல் முன்னேறும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில தேவையற்ற சங்கடங்கள் வரக்கூடும் என்பதால் பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ள நீங்கள் தடைகளை தாண்டி முன்னேற முயற்சி செய்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற நிகழ்வுகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களுடன் எதிர்பாராத சலசலப்புகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாமல் இருப்பது உத்தமம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற நபர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஈகோ பிரச்சனை வர வாய்ப்பு உண்டு கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. உங்களை சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புது உற்சாகம் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் திருப்பங்கள் வரக்கூடும் கவனம் தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் தைரியமுடன் எதிர் கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்களை புரிந்து கொண்டு ஆதரவு கொடுப்பார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இழுப்பறியில் இருந்த வேலைகளும் சேர்ந்து முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் அடங்கக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சகோதரத்துவம் வலுவடைய விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விமர்சனங்களை தகர்த்து எறிவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நபர்களுடைய ஆதரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை கவனமுடன் கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கனவுகள் நினைவாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளுடைய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மன குழப்பம் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்கள் மூலம் வீண் அலைச்சலை சந்திக்க கூடும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் சுபிட்சம் நிலவக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. பொது காரியங்களில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. சகோதரர் சகோதரிகளின் ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த புதிய சலுகைகள் கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆவதில் தாமதம் ஏற்படக்கூடும். குடும்ப உறவுகளுக்கு இடையே புதிய புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை, கவனம் சிதறல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்