மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் புதிய அத்தியாயமாக இருக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் பொறுமை அவசியம். பிறரை நம்பி காரியங்களை ஒப்படைக்க வேண்டாம். பணியிடங்களில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு தீரும். பழைய பாக்கி வசூல் ஆவதில் இழுபறி நிலை ஏற்படும். வீட்டில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவு ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். தொலைதூரப் பயணங்களை சற்று தள்ளி போட வேண்டும். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
கடகம்:
கடக ராசியினர் இன்றைய தினம் எதையும் சாதிப்பார்கள். பழைய கடன்களை தீர்த்து முடிப்பீர்கள். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் சுப காரியங்களில் கலந்து கொள்வார்கள். தொலைதூரப் பயணங்கள் லாபகரமானதாக அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் தீரும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழியை யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் தங்களின் மனசாட்சிப்படி செயல்பட வேண்டியிருக்கும். வியாபாரங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலர் தொலைதூர ஆன்மீகத் தலங்களுக்கு செல்வார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் விரைவில் முடியும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் கவனம் தேவை. பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலையே இருக்கும். பண விவகாரங்களில் புதிய மனிதர்களை நம்ப வேண்டாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் தடைகளைக் கடந்து வெற்றி பெரும் அமைப்பு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டிகளை சமாளிப்பீர்கள். சிலருக்கு வாகனங்கள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படும். நண்பர்கள் யாரேனும் உங்களை கடன் கேட்டு தொந்தரவு செய்வார்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் அமோகமான நாளாக இருக்கும். உங்கள் பேச்சுக்களால் காரியங்களை சாதிப்பீர்கள். பணி இடத்தில் நீங்கள் விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் புதுமையான நாளாக இருக்கும். உடல், மனம் உற்சாக துடிப்புடன் செயல்படுவீர்கள். நீண்டநாள் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் பணவரவு உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியினர் இன்றைய தினம் உழைப்பால் உயர்வுகளை பெறுவார்கள். ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்களைப் பெறுவார்கள். தம்பதிகளிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் மனோ தைரியம் அதிகரிக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். சிலருக்கு அன்னிய நபர்களால் பணவரவு உண்டாகும்.