மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் சிலருக்கு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு ஆத்திரத்தால் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம் எனவே அதனை கட்டுப்படுத்துவது நல்லது. சுய தொழில் லாபம் உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு மற்றவர்களுடைய பங்களிப்பும் இருக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையில் விரிசல் விழக்கூடும் கவனம் வேண்டும். சுய தொழிலில் லாபம் உண்டாக கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில அனுகூலமான பயன்கள் உண்டாகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத நபர் ஒருவரை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது வரை இருந்து வந்த தடைகள் விலகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகமாக வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எவரையும் எதிர்க்கும் துணிச்சல் பிறக்கும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் வலுவாக வாய்ப்புண்டு கவனம் வேண்டும்
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை ஒத்திவைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பலன் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுப காரிய தடைகள் விலகி நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு தன லாபம் காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்கள் மூலம் புதிய அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் உதவிக்கரம் கிட்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டாகும். சுப காரியங்களில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். கணவன் மனைவி இடையே இருக்கும் பனி போர் நீங்கும். சுயதொழில் நீங்கள் லாபத்தை அதிகரிக்க புதிய யுத்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணிச்சுமை உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதில் பின்னடைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற பகைகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திறமைக்கு சக பணியாளர்களிடம் நல்ல ஒரு வரவேற்பு இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நல்ல வாய்ப்புகள் இருக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. அசையும் மற்றும் அசைய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தட்டிப் பறிக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனமகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தொடர் தடைகள் விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் லாபத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களிடமிருந்து சில எதிர்ப்புகள் வரலாம் கவனம் வேண்டும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பிரச்சினைகளில் இருந்து சற்று அமைதியாக இருப்பது நல்லது. எதையும் பேசி பேசி பெரிதாக வளர்க்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படும், கவனமாக கையாளுவது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவை விட செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் சீக்கிரமாக இருப்பது நல்லது. தொலைதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பக்தி பெருக்கெடுக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் திடமுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் நலம் பெறும்.