மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு பின்னர் செயலாற்றுங்கள் வீன் அலைச்சலை தவிர்க்கலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருள் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகள் மூலம் உங்களுக்கு சாதகமான மாற்றங்களை செய்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு மனம் நிறையும்படியான மகிழ்ச்சி தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து ஒற்றுமை வலுப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வட்டி பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உடல்நலம் முன்னேற்றம் காணும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு பக்தி மார்க்கத்தின் மீது அதிக ஈடுபாட்டுடன் காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. பொது காரியங்களில் செலவு செய்ய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமயோகிதமாக செயல்படுவதன் மூலம் தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளினால் சில இன்னல்கள் வரலாம் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியம் காண்பிக்காதீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே உணர்ச்சிவசப்படாமல் பொறுமையை கையாளுவது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் நம்பிக்கை செலுத்தாதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களை வளர்க்காமல் மௌனம் காப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க கூடிய அமைப்பாக காணப்படுகிறது. வீட்டு தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருமித்த கருத்து உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைகளையும் உடனுக்குடன் கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள் நடக்குமா? என்று நினைத்த ஒரு காரியம் நடக்கப் போகிறது. குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு முக்கிய முடிவுகளை எடுப்பது நன்மை தரும். புதிய தொழில் துவங்கும் எண்ணம் ஒரு சிலருக்கு மேலோங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பட்ஜெட்டில் துண்டு விழலாம் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தடைபட்ட சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பொறுப்பு கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய சவால் நிறைந்த பணிகளை முடிக்க வேண்டி வரலாம். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்களில் தடைகள் வரக்கூடும் எனவே எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நீண்ட நாள் விரிசல் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வம்பு வழக்குகள் வரக்கூடும் சிக்கிக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு புத்துணர்ச்சியுடன் காணக்கூடிய இனிய நாளாக இன்று அமையப் போகிறது. மனதிற்கு பிடித்தவர்களால் அனுகூல பலன்கள் கிட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் நிறை குறைகளை உங்களுடைய திறமையால் திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பெரிய செலவுகள் வரக்கூடும் எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகளையும் கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு எங்கும் எதிலும் வெற்றி கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ஏற்றம் காணப்படும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு விரக்தி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். எது சரி? என்கிற முடிவு எடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எடுக்கின்ற முடிவுகளில் இருந்து பின்வாங்காதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூட்டாளிகளின் பேச்சை கேட்பது நலம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் இருக்கும் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கிய செலவுகள் வரலாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. ஒருபுறம் நீங்கள் எதிர் பார்த்த அளவிற்கு பணவரத்து இருந்தாலும் அதற்கு உரிய செலவுகளும் வந்து சேரும் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் சாதகப் பலன் கிட்டும். வாடிக்கையாளர்களை கவர புதிய யுத்திகளை கையாளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து தளர்வு கிட்டும். ஆரோக்கியம் முன்னேறும்.