மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொடர் இடையூறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. தேவையற்ற இடங்களில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்கள் ஈடேற வாய்ப்பு உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடா முயற்சி நல்ல வெற்றியை கொடுக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். பல வெற்றி வாய்ப்புகளை பெறுவீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்ப்புகள் ஈடேறும். ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கப் போகிறது. தட்டி சென்ற வாய்ப்புகள் எல்லாம் மீண்டும் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் போகிறது. பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறந்த எண்ணங்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையில்லாததின் அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை. ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக காணப்படுகிறது. புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் சச்சரவை ஏற்படுத்தலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முடிவுகளை தீர்க்கமாக எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கவும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. சுய தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. ஆசைப்பட்ட பொருட்களை வாங்குவீர்கள். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அகன்று வெற்றி பாதை அமையும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனை முடிவுக்கு வரும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நேர்மையான எண்ணங்களால் சாதிக்க கூடிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடையும் யோகம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த மகிழ்ச்சிக்கு இடையூறுகள் ஏற்படலாம் கவனம் தேவை. தொலைதூர இடங்களில் இருந்து நற்செய்தி பெறலாம். உடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு விழிப்புணர்வு தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்க வேண்டும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையவின் சந்தேகங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்தமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தீட்டிய திட்டங்கள் தீட்டியபடி நிறைவேறும் என்பதால் உத்வேகத்துடன் காணப்படுவீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபம் வர இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும் இதனால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.