மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களை சாதக பலன்களை பெறலாம். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிடக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு உடலில் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு, தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தீட்டிய திட்டங்கள் தீட்டியபடி நடக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புது உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை தேவை. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை சிந்தனைகள் தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பவை காலதாமதமாக நடக்க வாய்ப்பு உண்டு பொறுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை இருந்து வந்த கவலைகள் மறையும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளில் சாதக பலன் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய யுக்திகளை கையாள வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திருப்தி இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு சுய மதிப்பீடு தேவை. மற்றவர்களுடைய கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழக்கூடும் கவனம் வேண்டும். சுய தொழிலில் எதிர்பாராத சிற்பங்கள் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணியது ஈடேறும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு பல தடைகளை தாண்டிய முன்னேற்றம் இருக்கும். கணவர் மனைவி இடையே இருந்து வந்த பிணக்குகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் பகை வளரும் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை சிந்தனை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு கடல் தாண்டி நற்செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. சமூக அக்கறை அதிகரிக்கும். குடும்ப அமைதிக்கு அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் நினைத்த லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு எண்ணியது தடையில்லாமல் நடக்க வாய்ப்பு உண்டு. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்கவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணம் புழங்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த இனிய நாளாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் விரயங்கள் வரலாம் கவனம் வேண்டும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு நிதானம் இருக்கும். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்திப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடுமையான உழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பொருளாதார ஏற்ற இறக்கங்கள் திறம்பட சமாளிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பகைவர்கள் சூழ்ச்சி தெரியவரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவ அறிவு ஏற்படும்.