மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்தது பூர்த்தி அடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளை வெளியில் பேசாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரலாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப அமைதிக்கு பிரச்சனைகள் வரலாம். நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனநிலையில் தடுமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் பலிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகள் யாவும் தகரும் நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுய தொழிலில் உள்ள உங்களுடைய சமூகத்தின் மீதான பார்வை மாற்றம் பெற வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்கள் சேர்க்கை அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புத்தகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து நீங்கள் அலட்சியம் செய்யாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுமை உங்களை உயர்த்திக் காட்டும். குடும்ப நலன் கருதி பொறுப்புடன் செயல்படுவது நல்லது. சுய தொழில் செய்யும் நபர்கள் எதிர்பார்த்தது கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்க போகிறது. சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். சுய தொழில் செய்யும் நீங்கள் புதிய ஒப்பந்தகளில் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிலர் அன்பு கட்டிப்போடும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் அடுத்தவர் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடமையில் அக்கறை தேவை. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுப பேச்சுகள் வெற்றிகள் தரும். குடும்பத்தில் அமைதி இருக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு பொறுமை தேவை. முன் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொது இடங்களில் வக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வாக்கு பலிதமாகும். நீண்ட நாள் பாக்கிகள் வசூலாகும். கணவன் மனைவி இருவரும் இணைந்து முடிவெடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத விதமாக பண வரவை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தது நடக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகள் நனவாக வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வரலாம். சுய தொழில் செய்பவர்கள் நாணயத்துடன் இருப்பது உத்தமம். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கிய அக்கறை தேவை.