மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய சிந்தனைகள் உதிக்கக்கூடிய நல்ல நாளாக அமைந்துள்ளது. குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களை கவர்வதில் தடைகள் வரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நினைத்தது நடக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சேமிப்பும் செலவாக கூடிய சாதகமற்ற அமைப்பாக அமைந்திருக்கிறது. குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத நற்செய்திகளை பெறுவீர்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வீட்டு தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உதவி கேட்டு சிலர் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் உங்களுக்கு முன்னுரிமை தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதையும் நயமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பலன் தரும் இனிய நாளாக அமையப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு பிணக்குகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நவீன உபகரணங்கள் சார்ந்த விஷயங்களில் சாதக பலன்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயலாற்றக்கூடியது நன்மை தரும். குடும்ப உறவுகளுக்கு இடையே புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிலும் பொறுமை தேவை அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய தன்னம்பிக்கை துளிர்விடும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மறையும். தொட்டதெல்லாம் பொன்னாகும் இனிய நாளாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நீங்கள் முன்னின்று செயலாற்றக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிலர் நன்றி மறந்து செயல்படக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பாக என்பதால் வரக்கூடிய விளைவுகளை பொறுமையுடன் எதிர்கொள்வது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். புதிய புரிதல் உண்டாகும். சுய தொழிலில் தேவைகளுக்கு சாதக பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிலரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது வேகம் தவிர்க்கவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இழந்த உறவுகளை பெரும் யோகம் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக கொண்டாட இருக்கிறீர்கள். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் உங்கள் பலம் அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களின் ஆதரவால் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் கூர்ந்து கவனிக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. கண்களால் காண்பதையும், காதால் கேட்பதையும் வைத்து முடிவு செய்யாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடினமான உழைப்பிற்கு உரிய பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வு தேவை.